உலகின் தலைச்சிறந்த இயக்குனர்கள் என கருதப்படும் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க், டேவிட் பிஞ்செர், ஜேம்ஸ் காமெரோன் , கிறிஸ்டோபர் நோலன் தொடங்கி நம்மவூர் மணிரத்னம் வரை உள்ள, இவர்கள் அனைவரின் படங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு. மேற்சொன்ன இந்த ஜாம்பவான்கள், படத்தின் கதாபாத்திரங்களுடன் நம்மை ஒன்ற செய்து பின்அந்த கதாபாத்திரங்களுக்கு நடக்கும் சந்தோஷத்தையும் , துக்கத்தையும் உணர வைப்பார்கள்.இந்த ஆசாத்திய ஆளுமையே , இவர்களை பார்ப்போற்றும் நாயகர்களாக்கியது.
சில படங்கள் பார்க்கும்பொழுது, நாம் அனைத்து கவலைகளையும் மறந்து காரின் பின் இருக்கையில் அமர்ந்து ரசிக்கும் பயணம் போல் இருக்கும். அனால் கிறிஸ்டோபர் நோலன் சற்றே வித்தியாசமான சாரதி ! திடிரென ஒரு கார் ஹீரோவை நோக்கி வருகிறது என்றால் , ஏதோ உங்களை நோக்கி வருவது போல் உணர்வீர்கள், அது தான் அவர் படங்களின் வெற்றி !
ஒரு படத்தின் முதல் காட்சியை அமைப்பதில் நோலனிற்கு என்று ஒரு ஸ்டைல் உண்டு. நோலனின் மைய கதாபாத்திரங்கள், எப்போதுமே பல விடை அளிக்காத கேள்விகனைகளுடன் தொடங்கி பின் பாதியில் படம் முடியும் தருவாயில் அனைத்தும் விளங்கியது போன்ற யூகத்துடன் ஒரு ஒளிவட்டம் தோன்றும். ஏதோ ராமானுஜத்தின் ஈக்குவேசனை சால்வ் செய்த பெருமிதத்துடன் வெளியே வருவீற்கள். அனால் இரண்டாம் முறை அல்லது மூன்றாம் முறையோ தான் முழுவதும் விளங்கும்.
கவனம் சிதறாமல் படம் பார்த்திர்கள் என்றால், முதல் முறையும் புரிய வாய்ப்புண்டு. மேற்சொன்ன அனைத்து அம்சங்களும் Interstellar இல்லும் உள்ளன.
சாதாரன கதை என்றாலே நோலன் கட்டிப்போட்டு விடுவார் , இதில் விண்வெளி பற்றிய ப(பா)டம் என்றால் சொல்லவா வேண்டும்! மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார். 'Interstellar ' ,கண்டிப்பாக நோலனின் சிறந்த படம் என சொல்ல முடியாது என்றாலும் , நான் இது வரை பார்த்த விண்வெளி பற்றிய படங்களில் சிறந்தது என்பது என் தாழ்மையான கருத்து.
பொதுவாக , 'Space ' பற்றிய படங்கள்,விண்வெளியில் உள்ள கதாபாத்திரத்தின் பார்வையிலயே இருக்கும். படத்தின் பெரும் பகுதி அவர்களின் உயிர்ப்போரட்ட படலங்களே நிறைந்து இருக்கும். அனால் 'Interstellar ' சற்றே வித்தியாசமான் அனுபவம். படத்தில் தந்தை - மகள் பிரிவு உண்டு , சந்தர்ப்பவாத விண்வெளி வீரனுக்கும் - உண்மையான வீரனுக்கும் இடையான சிறு போர் உண்டு , இவை அனைத்திற்கும் மேலாக 'புவி ஈர்ப்பை ' (Gravitaional anomaly /force ) கடவுளாக , பேயாக , ஒரு தூதுவனாக, வேற்றுக்கிரகவாசிகளாக, எதிர்கால மனிதர்களாக காட்டும் உவமையும் உண்டு!

நோலனின் வசனங்கள் எப்போதுமே பெரும் வரவேற்ப்பை பெரும் , அதற்கு அவரது கூர்மையான கருத்துகளும் , இயல்பான நகைச்சுவை உணர்வுமே காரணம். தற்போதைய சூழ்நிலையில் , பொறியாளர்களும் , ஆராய்சியாளர்களும் தேவையில்லை, விவசாயிகள் தான் தேவை என சொல்லும் இடத்திலும், இந்திய 'drone aircraft'யை பூமியின் அழிவுகாலத்தில் காட்டி , இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை உகித்த இடத்திலும், நோலன் நாஸ்ட்ரடேமஸ் ஆகிவிட்டார் !
படத்தின் முற்பகுதியில் ஒரு புத்தக அலமாரியும் , புழுதி புயலும் எவ்வாறு தூது சொல்ல முடியும் என வியக்க வைத்து, பின்பு 'Five dimensional' tesseract ல் சிக்கிகொண்டு Matthew McConaughey கொடுக்கும் துப்பு, ஓராயிரம் அற்புதங்கள் கண்டதற்கு சமம்!
அதேபோல், டைம் ரெலைடிவிட்டி, Gravitational Anomaly, மர்பி லா போன்ற அறிவியல் கூற்றுகளை அசாத்தியமாக, அதே சமயம் நம்பும் படியாக கொடுத்த நோலனிற்கு ஒரு ஆஸ்கார் பார்சல் செய்யலாம் !
அதேபோல், டைம் ரெலைடிவிட்டி, Gravitational Anomaly, மர்பி லா போன்ற அறிவியல் கூற்றுகளை அசாத்தியமாக, அதே சமயம் நம்பும் படியாக கொடுத்த நோலனிற்கு ஒரு ஆஸ்கார் பார்சல் செய்யலாம் !
இண்டெர்ஸ்டெல்லாரில், இன்செப்ஸன் அல்லது பேட்மேன் படங்கள் போல் வியக்க வைக்கும் காட்சிகள் குறைவு என்றாலும், கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்ஸர் அடித்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்! வேற்றுக்கிரக தண்ணீ ரில் ஏற்கனவே தொலைந்த விண்வெளி வீரரின் பொருட்களை எடுக்கும் பொழுது தூரத்தில் தெரிவது மலையல்ல அலை என உணரும் இடத்திலும், Matthew McConaughey மற்றும் அண்ணா ஹத்தவேயின் விண்கலம் சுழலும் dock இல் சுழன்றுகொண்டே பொருத்தும் இடதில்லும் விஷுவல் மேஜிக் !
மொத்தத்தில் நீங்கள் இது வரை விண்வெளி பற்றிய படங்கள் என்றால் , bore என நம்புபவர் ஆயின் கண்டிப்பாக இண்டெர்ஸ்டெல்லார் போய்வாருங்கள் , நோலன் உங்கள் நம்பிக்கையை உடைத்துவிடுவார் !
its a nice review , i could say it
ReplyDeleteThank you :)
DeletePleasure is mine , Pal :)
Deletethanks for the review in tamil
ReplyDeleteThank you :)
DeleteArumai Arumai !!
ReplyDeleteUnga review padicha aparam padam pakungara aarvam athigam aagiyirukku sir :))
Nandri :)
Delete